தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதோடு சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் போன்றவற்றால் அசோகர்யமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் சில இடங்களில் வெப்பநிலையும் அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.