மதுரையில் விசாகா என்ற பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த சரண்யா மற்றும் பரிமளா என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி அனுமதி இன்றி நடத்தப்பட்டது தெரியவந்தது. இதனால் விடுதி உரிமையாளர் இன்பா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே மதுரை மாநகராட்சி சார்பில் இந்த விடுதியை காலி செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.