தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் செயல்படாது. அவர்கள் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும், இறக்கு கூலி வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறார்கள். மேலும் இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் செயல்படாது.