அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, விஜயை பார்த்து திமுக பயப்படுவது ஏன். விஜய் கட்சி ஆரம்பத்தில் இருந்து திமுகவுக்கு தான் பாதிப்பு என்று அவர்கள் நினைக்கிறார்கள். வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக தான் மக்கள் வாக்களிப்பார்கள். திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கு தான் வரும்.

எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். களத்தில் சந்திப்போம் என்ற தைரியம் இருக்க வேண்டும். ஆனால் திமுகவுக்கு அந்த தைரியம் கிடையாது. திமுகவின் வாக்குகள் அனைத்தும் விஜய் கட்சிக்கு சென்று விடும் என்ற பயத்தில் தான் ஆரம்பத்திலேயே வளர விடாமல் தடுக்க பார்க்கிறார்கள். மேலும் விஜய் வளர விடக்கூடாது நசுக்கி விட வேண்டும் என்பதில் திமுக தீவிரம் காட்டுகிறது எனவும் கூறினார்.