
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் வசிக்கும் 32 வயதான திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைகாவலர் மாரீஸ்வரன் என்பவர் திருநங்கைக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த திருநங்கை சிறை கண்காணிப்பாளர், சிறைத்துறை டி.ஐ.ஜி ஆகியோரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். துறையூர் ரீதியாக நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சிறைகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மாரீஸ்வரன் தலைமறைவானார். இதனால் தனிப்படை அமைத்து காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் மாரீஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆதார் படுத்தி சிறையில் அடைத்தனர்.