உலகில் இனிவரும் காலத்தில் ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் ஜர்னலில் ஒரு ஆய்வு நடத்தியது. அதாவது கிழக்கு ஐரோப்பாவின் மோல் வோல்ஸ் மற்றும் ‌ ஜப்பானின் ஸ்பைனி எலிகளில் Y குரோமோசோம்கள் மறைந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது பெண் குழந்தைகள் பிறப்பை XX குரோமோசோம்களும் ஆண் குழந்தைகள் பிறப்பதை XY குரோமோசோம்களும் நிர்ணயிக்கிறது. அதன்படி ஆணின் Y குரோமோசோம்கள் பெண்ணின் X குரோமோசோமுடன் இணையும் போது தான் ஆண் குழந்தை ஆனது பிறக்கிறது.

இதில் தற்போது Y குரோமோசோம்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் இதுவரை 900 செயலில் உள்ள மரபணுக்கள் அழிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 11 மில்லியன் ஆண்டுகளில் மீதமுள்ள மரபணுக்களும் அழிந்து விடும். இதனால் இனிவரும் காலங்களில் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மனித சமுதாயம் வித்தியாசமான பாலினத்தை எதிர்கொள்ளலாம் அல்லது ஆண் குழந்தைகளை இல்லாமல் இருக்கலாம் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அப்படி பார்த்தால் இன்றிலிருந்து 110 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.