உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அஜித் சவுஹான் (30) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கொடூர செயல்களை வீடியோவாக பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பணம் கேட்டு மிரட்டியும் வந்துள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியில் வந்த பின்னர், ஆறு சிறுவர்கள் தைரியமாக முன்வந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இன்னும் பல சிறுவர்கள் தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் குறித்து வெளியில் சொல்ல தயங்கிக்கொண்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.