ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் பின்னர் விலை அதிரடியாக உயரத் தொடங்கியது.
இந்நிலையில் தொடர்ந்து சென்னையில் 4 நாட்களாக தற்போது ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி தொடர்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6695 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 93.50-க்கும் ஒரு கிலோ 93 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
