தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சமீபகாலமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை முதல் கன்னியாகுமரியில் அடைமழை பெய்து வரும் நிலையில் அங்கு அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.