தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 861 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் பணிகளுக்கு ஏற்றவாறு வயதுவரம்பு மாறுபடும். இந்த பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் 9, 11,12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.