சென்னை உயர்நீதிமன்றத்தில் நிகழ்ச்சி காலை வழக்கம் போல் நீதிபதி வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தார். அப்போது வழக்கறிஞர் ஒருவர் குடியிருப்பு நல சங்கத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக கூறினார். அதோடு இது தொடர்பாக வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறினார். அதோடு தேசிய கொடியை ஏற்றும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கு நீதிபதி சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பது  குற்றம். எனவே அந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது குண்டன் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். தேசியக்கொடி ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்குவது அவமானம். கொடியேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும் அப்படி தடுப்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்று கூறினார்.