
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதோடு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்கள் ஆறுதல் கூறினர். அவர்கள் நேற்று இரவு வயநாட்டில் தங்கிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது வயநாட்டில் நிலச்சரிவினால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 200 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு இடத்தில் நிலம் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு போல் வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு வீடும் சுமார் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட இருக்கிறது. மேலும் ராகுல் காந்தி வயநாட்டில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்தது வரவேற்பை பெற்றுள்ளது.