UGC NET தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் நான்காம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் இரண்டு பிரிவுகளாக யுஜிசி நெட் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு புகாரை தொடர்ந்து கடந்த மாதம் நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் புதிய தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
