முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து இன்று பிற்பகல் 3 மணி அளவில் 12,000 கன அடி தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி தற்போது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்து தண்ணீரின் மீது மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் குருவை சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழா போன்றவற்றை முன்னிட்டு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இந்த வருடம் போதிய நீர் இல்லாததால் தற்போது திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.