நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரின் போது நேற்று மத்திய ‌ மின்சாரத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டண திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அப்படி எந்த ஒரு திட்டமும் இதுவரை மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.

அதாவது மின்சார சட்டம் 2003 மின்சார விதிகளின்படி மாநில ஒழுங்குமுறை மின்சார ஆணையம் ஆனது நுகர்வோருக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம். இதில் மத்திய அரசு தலையிடாது. மேலும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின் கட்டண முறையை  அமல்படுத்துவது போன்ற எந்தவொரு திட்டங்களும்  இதுவரை மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.