டெல்லி உச்சநீதிமன்றத்தில் கனிம வளங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை உள்ளடக்கிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பதை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் வரையறுக்கவில்லை.
அதன் பிறகு 246-வது சட்ட பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங்களே அதற்கு வரி விதிக்கும் அதிகாரத்தை பெறுகிறது. எனவே கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என கூறி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் கனிம வளங்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைகளை எதிர்த்து மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்று கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது.
