ஆந்திர மாநிலத்தில் உள்ள கதிரி பகுதியில் நாகராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் மது போதையில் இருந்தார். அப்போது ஒரு நாகப்பாம்பு ஒன்று பாதையில் வந்தது. அதனை அந்த வாலிபர் பிடித்து கையில் வைத்து விடாப்பிடியாக வம்பிழுத்தார். அவரிடமிருந்து நழுவ நாகப்பாம்பு தொடர்ந்து சீண்டியது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் மது போதையில் இருந்த அவர் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பாம்பு திடீரென அவருடைய கையில் கடித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு ‌ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த வாலிபர் பாம்புடன் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.