உலக நாடுகளின் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 82 வது இடத்தில் உள்ளதாக Henley passport தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேசியா மற்றும் மலேசியா உள்ளிட்ட 58 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வர முடியும். கென்யா உள்ளிட்ட 62 நாடுகளுக்கு பயணம் செய்து பிறகு அந்த நாட்டின் அனுமதியை பெற்றுக் கொள்ள முடியும்.
ரஷ்யா போன்ற 177 நாடுகளுக்கு விசா கட்டாயமாக தேவைப்படும் என்று கூறியுள்ளது. மேலும் சிங்கப்பூர் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடாக உள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். கடந்த ஆண்டை விட இந்தியா 3 இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் 100வது இடத்தில் உள்ளது.
