
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் என்ற பெயர் குறிப்பிடப்படாததும் தமிழகத்திற்கு தனியாக எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பதாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது. தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.