திருநெல்வேலியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் நகர்ப்புறங்கள் முதல் குக் கிராமங்கள் வரை அரசு பேருந்துகள் செல்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் பிறகு நாட்டிலேயே நேரத்திற்கு நேரம் செல்லும் பேருந்துகளும் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

தமிழக போக்குவரத்து துறை டீசல் மானியம் மற்றும் இலவச பேருந்து போன்றவற்றால் சிறப்பான முறையில் செயல்படுகிறது. கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் குறைந்த அளவில்தான் அரசு பேருந்துகள் வாங்கினார்கள். அதனால்தான் பழைய பேருந்துகளை வைத்து இயக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் திருநெல்வேலி மண்டலத்திற்கு மட்டும் 199 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 144 பேருந்துகள் அமலில் இருக்கிறது. அதோடு கூடுதலாக 302 பேருந்துகளும் வர இருக்கிறது என்று கூறினார்.