குஜராத் மாநிலத்தில் புது வகையான சாண்டி புரா வைரஸ் பரவி வருகிறது. இந்த நோயினால் ஏராளமானோர்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வைரஸ் தொற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூளை அழற்ஜியை குறிக்கிறது. இந்நிலையில் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பினால் தற்போது 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமியின் மாதிரியை சோதனை செய்ததில் சாண்டிபுரா வைரஸ் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இது போக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவரும் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த வைரஸ் பாதிப்பு தொற்று குறித்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.