தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவருக்கு சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருத்தணி முருகன் கோவிலில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது. நடிகர் பிரேம்ஜியின் மனைவி இந்து ஒரு வங்கியில் பணிபுரிந்தவர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தன் கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இந்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன் கணவர் சமையல் செய்வது போன்று ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் ஒரு காலத்தில் எப்படி வாழ்ந்தவர் தெரியுமா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு கோவா படத்தில் இடம் பெற்ற ஒரு வீடியோவையும் வைரலாக்கி உனக்கு அவர் யாருன்னு தெரியுமா.? ஒரு காலத்துல எப்படி வாழ்ந்தவர் என்று தெரியுமா என்ற வசனத்தையும் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து ‌ கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Indhu PM (@indhu.premgi)