
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த மே 21 அன்று (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) மூளை திண்ணும் அமீபாவால் பலியானார். அதேபோன்று கண்ணணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூன் 25ம் தேதி அன்று பலியானார். இந்நிலையில் நோயின் மற்றொரு பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பயோலியில் 14 வயது சிறுவனுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இது ஏரிகள் மற்றும் ஆறுகளில் வளரும் ஒரு செல் உயிரினம் ஆகும். அசுத்தமான நீரானது மூக்கு வழியாக உடலுக்குள் சென்று மூளை திசுக்களை சேதப்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகிறது.