சென்னை வடபழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட என் ஜி ஓ காலனி பகுதியில் சுமார் 25 வருட பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தரத்தில் விஜயலட்சுமி என்ற பெண் ஒருவர் வசித்து வந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் விஜயலக்ஷ்மி பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பால்கனியில் இருந்தவாறு பூவாங்கியுள்ளார்.

இந்த நிலையில் அப்போது திடீரென்று பால்கனி இடிந்து விழுந்ததில் கீழே இருந்த பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பால்கனியில் இருந்து விழுந்த விஜயலட்சுமிக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வீட்டில் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.