கேரள மாநிலத்தில் ஏடிஎம் மில் கள்ள நோட்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டயம் அருகே ஈராற்றுபேட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம், சிடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு  முன்பு இந்த சிடிஎம் இயந்திரத்தில் பணம் போடப்பட்டிருந்தது.

இந்த பணத்தை வங்கி அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளார் அப்போது அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அதில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் ரூ.2.24 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள்,  போலீசில் புகார் செய்த நிலையில்  கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்ததாக சந்தேகிக்கப்படும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.