பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை பல்வேறு முதலீட்டு திட்டங்கள் இருக்கிறது. அந்தக்கதையில் குழந்தை பிறந்தவுடன் அதனுடைய பெயரில் ஒரு சிறிய தொகையை SIP-ல் முதலீடு செய்தால், அந்த குழந்தையானது வளரும்போது, முதலீடும் பல மடங்கில் வளர்ந்துவிடும். அதன்படி, குழந்தை பிறந்ததும் மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் மாதம் மாதம் 2,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும் ஆண்டுக்கு 12% வட்டியில் 20 ஆண்டுகளில் சுமார் ரூ.21 லட்சம் கிடைக்கும்.
இதில் வட்டியாக மட்டுமே 16 லட்சம் கிடைக்கும். SIPயில் முதலீடு செய்பவர்கள் வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு வரக்கூடிய தொகையும் உயர்ந்து கொண்டே இருக்கும்.
