இந்தியாவில் 2024-25 ஆம் காலாண்டின் காரிஃப் பருவத்திற்கான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

அதன்படி நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு  117 ரூபாய் உயர்த்தி 2300 ரூபாயாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நெல், ராகி, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது