தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது . இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதனுடைய இவர் சில பெண்களோடு நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு பெண்ணோடு இவர் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அவருக்கு ஒரு வீடும் எடுத்து தங்க வைத்துள்ளார். பின்னர் கள்ளக்காதலியோடு அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த மனைவி அந்த கள்ளக்காதலி வீட்டிற்கு நேராக சென்று, தன்னுடைய மகனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் தன்னுடைய மனைவியும், மகனையும் அடித்திருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர் .இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
