மக்களவைத் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்கின்றது. நாளை மறுநாள் ஜூன் ஒன்பதாம் தேதி மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்க இருக்கின்ற நிலையில் இன்று NDA கூட்டணி டெல்லியில் நடந்து வருகின்றது.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு அனைத்து கட்சியின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழாவில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்தவர்களும் டெல்லி பயணம் சென்றுள்ளனர். பதவிஏற்பு முடிந்த பிறகு தமிழகத்தில் பாஜக தோல்விக்கான காரணம் என்ன என்று அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.