நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜகவுக்கு பெரும்பான்மை இடங்களில் வெற்றி கிடைக்காததால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவு தேவைப்படுகிறது. இவர்கள் இருவரின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் மத்தியில் ஆட்சி அமைப்பார்கள். இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாருக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்குவதற்கு பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் சித்தார்த் நாத் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவர் தன்னுடைய கட்சியினருடன் ஆலோசித்துவிட்டு 24 மணி நேரத்திற்குள் பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அவர் பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்று ஆதரவு கொடுப்பாரா இல்லை எனில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.