
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றியைத் தொடர்ந்து திமுக தலைமையகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜக சொல்லியது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை கூட தொட முடியாத இடத்திற்கு தள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.