பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவின் X தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. “டெல்லி தலைமையின் முடிவு கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர். தமிழக மக்களின் முடிவு 2026 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு கோவை பாராளுமன்ற தொகுதியில் படுதோல்வி அடைந்த அண்ணாமலையை கிண்டல் செய்யும் விதத்தில் இருப்பதாக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதியாக வெல்வார் என்று பல கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
