
நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக வாக்குகள் வாங்கினால் கட்சியை கலைப்பதாக சீமான் சவால் விடுத்திருந்தார். அதற்கு அண்ணாமலை, பாஜக வாங்கும் வாக்கில் பாதி அளவு கூட நாம் தமிழர் கட்சியால் வாங்க முடியாது என பதிலடி கொடுத்தார். தற்போது முன்னிலை நிலவரம் அண்ணாமலையின் கூற்றை உறுதி செய்துள்ளது. அதாவது பாஜக 11.61%, நாம் தமிழர் கட்சி 4.24 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து சீமான் கட்சியை கலைப்பாரா என பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.