தலைநகர் டெல்லியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று இந்த முறையும் 7 தொகுதிகளிலும் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இருப்பினும் அவருடைய பிரச்சாரம் பெரிய அளவில் எடுபடவில்லை. தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறும் போதிலும் அவர்களால் மக்களவைத் தொகுதிகளை வெல்ல முடியவில்லை. மேலும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவின் கை ஓங்கி உள்ளது இந்தியா கூட்டணிக்கு சரற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
