
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளான இன்று கோவை மக்கள் அவருக்கு சிறந்த பரிசளித்துள்ளனர் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது ஒரு மணி நிலவரப்படி திமுகவின் கணபதி ப. ராஜ்குமார் 1,18,699 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜகவின் அண்ணாமலை 95 ஆயிரத்து 449 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 51 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். கோவை தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்று விடுவோம் என்று அண்ணாமலை மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் சிறந்த பிறந்தநாள் பரிசாக கோவை மக்கள் அண்ணாமலையை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளனர்