
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணை பிறப்பித்துள்ளது. கனமழையால் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கனமழையை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் முழுவிச்சில் தயாராக இருக்க வேண்டும் எனவும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.