எந்த ஒரு துறையில் வேலை கிடைக்கும் என்றாலும் அந்த வேலை தொடர்பான திறமைகள் கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி எடுத்து திறமையை மேம்படுத்திக் கொள்ளும் போது மற்றவர்கள் பயிற்சி பெற முடியாததால் அப்படியே நிறுத்தி விடுகின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்காக தான் மத்திய அரசு நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி ஆஃப் இந்தியா என்ற அமைப்பை தொடங்கியுள்ளது. என்டிஎல்ஐ இணையதளத்தில் சில லட்சம் புத்தகங்கள் உள்ளன. https://ndl.iitkgp.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தேவையான புத்தகங்களை படிக்கலாம்.