அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாது என்கிற நிலை மாறி விட்டது, இனி அதிமுகவிற்கு வெற்றி தான் என தூத்துக்குடியில் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், ஒரு புயல்தான் வந்தது அதற்கே திமுக ஆட்சி ஆடி போய் விட்டது.

ஆனால் கடந்த கால அதிமுக ஆட்சியில் எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் வந்தது அப்போது நாம் திறமையாக செயல்பட்டோம். டிசம்பர் மாதம் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை வரும் என அறிக்கை விட்டது ஆனால் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் திமுக அரசு எடுக்கவில்லை