பாஜக கூட்டணியில் இணைந்த நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி திடீரென தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டத்தில் இருந்து ஆவேசமாக கிளம்பிய நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றிய சமக செயலாளராக இருந்த இளஞ்செழியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சரத்குமார் இவ்வாறு செய்தது எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவரை நம்பி லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அவர்களின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. எங்களுக்கு பாஜக வேண்டாம், பாஜக புடிக்கவில்லை எங்கள் தலைவர்தான் வேண்டும் என கூறியுள்ளார்.
