குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பு ஏற்படாது. குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. முதலமைச்சர் ஸ்கூலுக்கு போயிருக்காரா, இல்லையா? History புத்தகத்தை சரியாக படிக்க வேண்டும். குடியுரிமை சட்டத்தை நிறுத்த முதலமைச்சருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். CAA சட்டத்தை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதலமைச்சர் கூறிய நிலையில் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்துள்ளார்.