தமிழகத்தில் நீண்ட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளை மூடுவதைவிட, எத்தனை பேரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்கிறோம் என்பதே முக்கியமான விஷயம் என கூறியுள்ளார்.

மேலும் ஒரு டாஸ்மாக் கடையை மூடினால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேறு இடங்களுக்கு சென்று மது அருந்துவார்கள் எனக் குறிப்பிட்ட அவர், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் கவனமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.