சென்னையிலிருந்து புனே நோக்கி வந்து கொண்டிருந்த பாரத் கௌரவ் ரயிலில் பயணித்த 40 பயணிகளுக்கு வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஃபுட் பாய்சன் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் பயணிகள் அனைவருக்கும் புனே ரயில் நிலையத்தில் மூன்று மருத்துவக் குழுக்களால் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது பயணிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே வெளியிட்ட எக்ஸ் பதிவில் பயணிகள் அவர்களது தனியார் காண்ட்ராக்ட்டிடமிருந்து உணவை வாங்கியுள்ளனர் என்றும் ரயில்வே தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட உணவுகளை அவர்கள் உண்ணவில்லை என்றும் வெளியிட்டுள்ளது.