
புகழ்பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், “பேட்ட” திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளில் தான் சந்தித்த சவால்களைப் பற்றி மனம் திறந்து பேசினார். அதன்படி, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” வெற்றி குறித்து மகிழ்ச்சி அடைந்த கார்த்திக் சுப்புராஜ் அதற்கு நன்றியையும், படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரசியமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர்,
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தனக்கு முழு மனத் திருப்தியை தந்துள்ளதாகவும், பேட்ட திரைப்படம் வெளியாகி நான்கு வருடங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கதையை நான் தேர்வு செய்வதில்லை, கதை தான் என்னை தேர்ந்தெடுத்தது என தனது கதையின் தற்செயல் தன்மையை விளக்கும் விதமாக பேசியிருந்தார். இவரது பேச்சு அவரது படைப்பின் மீது அவர் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கை மற்றும் அவரது விடாமுயற்சியை காட்டுவதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.