இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் தலைவர்களை, பாஜக அரசு கைது செய்யும் என டெல்லி மாநில அமைச்சர் அதிஷி மர்லினா அச்சம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2-ல் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கைது செய்யப்படலாம் எனக் கூறிய அதிஷி, பாஜகவுக்கு எதிராக பேசுபவர்கள் மீதான கைது நடவடிக்கை கெஜ்ரிவாலுடன் முடிந்துவிடாமல் ஸ்டாலின், பினராயி விஜயன், ஹேம்நாத் சோரன் என பட்டியல் நீளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், டெல்லி அமைச்சர் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.