செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், பாரதிய ஜனதா கட்சியினுடைய சிறுபான்மை அணி சார்பாக தமிழகம் முழுக்க இஸ்லாமிய – கிறிஸ்தவ மக்களுக்கு பாரத பிரதமருடைய திட்டங்களை கொண்டு செல்லக்கூடிய ஒரு தொடர் நிகழ்ச்சியை நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து நாங்கள் ஆரம்பிக்க இருக்கிறோம்.  மதுரை கோரிப்பாளையம் தர்காவிலிருந்து அந்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றோம்.

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் என்று மாறி மாறி திமுகவும்,  அதிமுகவும் இஸ்லாமிய மக்களுடைய உணர்வுகளை தூண்டிவிட்டு தேசியத்திற்கு எதிராக….  தேச நலனுக்கு எதிராக….  தேச பாதுகாப்புக்கு எதிராக தொடர்ந்து அவர்களை போராட செய்வதன் மூலமாக வாக்கு வங்கி அறுவடை செய்கிறார்கள். இதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுடைய கல்வி,  பொருளாதார முன்னேற்றத்தை பற்றி கவலைப்படாத திராவிட அரசியல்வாதிகள்… இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியை  புரிந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கும் – கிறிஸ்தவர்களும் கூட்டம் கூட்டமாக கட்சியில் இணைந்து கொண்டிருக்க கூடிய சூழலில்,  மதுரையில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இஸ்லாமியர்களும் – கிறிஸ்துவர்களும் மத்திய அரசின் நலத்திட்டங்களில் ஏராளமான பயனாளிகளாக மாறிக் கொண்டு வரக்கூடிய சூழலில்,

இதை எப்படியாவது மடைமாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு,  திமுகவினர் ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அராஜக போக்கை மேற்கொள்வதும்,  காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய மாண்புமிகு தமிழக முதல்வர்.. திமுக உடைய தலைவர் ஸ்டாலின் அவர்கள், காவல்துறையை நேர்மையாக செயல்பட விடாமல்,  வேண்டுமென்று பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவது,  அடக்கு முறையை மேற்கொள்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.