
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி தன்னை வளர்ப்பதை விட, திமுகவை வளர்ப்பதில் தான் அதிகம் பாடுபடும். மகளிர் உரிமை மாநாடு நாடகம் என சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த காங். எம்.பி.திருநாவுக்கரசர்,
இந்த குற்றச்சாட்டுல ஏதாவது அர்த்தம் இருக்குதா ? ஏதாவது மீனிங் இருக்குதா ? திமுக தமிழ்நாட்டில் இருக்கிற கட்சியில் பெரிய கட்சி. நம்பர் ஒன் கட்சி திமுக தான். காங்கிரஸ் கட்சி காங்கிரஸ்ஸை வளர்ப்பதற்கான முயற்சி பண்றாங்க, நடவடிக்கை எடுக்குறாங்க. நடக்காது, முடியாதுன்னு சொல்லட்டும், தப்பு இல்லை. நாங்கள் நீங்க பிஜேபியை வளர்க்க முடியாதுன்னு நாங்களும் சொல்றோம். மாத்தி மாத்தி சொல்லிட்டு இருப்போம்.
திமுகவை வளர்ப்பதற்காகத்தான் காங்கிரஸ் செயல்படுது என்பதில் ஏதாவது மீனிங் இருக்கா ? சென்ஸ் இருக்கா சொல்லுறதுல.. திமுக ஏற்கனவே வளர்த்து இருகின்ற கட்சி, பெரிய கட்சி… ஆட்சியில் இருக்கிற கட்சி…. நம்பர் 1 தமிழ்நாட்டில் ஓட்டு பேங்க்ல இருக்கிற கட்சியினு பாத்தா திமுக தான். அதை வளர்க்கறதுக்காக காங்கிரஸ் செயல்படுதுன்னு சொல்றதுல அர்த்தமில்லாதது.
மகளிர் மாநாடு… மகளிர் உரிமைக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியார் காலத்திலிருந்து, அண்ணா காலத்திலிருந்து, கலைஞர் காலத்தில் இருந்து,, வழி வழியாக… சுய மரியாதை, அதே மாதிரி மகளிர் உரிமைகள்… இதுக்காக தொடர்ந்து பல்வேறு சட்டங்களை கொண்டு வந்து, நடைமுறைப்படுத்தி இருக்காரு.
அண்ணா காலத்தில.. கலைஞர் காலத்தில்… நிறைய சலுகைகள் வழங்கி, சொத்துரிமை – தேர்தல்களில் நிக்குற உரிமை, உள்ளாட்சித் தேர்தலில் இடம் பெரும் உரிமை… பெண்களுக்க்கு, படிக்கின்ற பிள்ளைகளுக்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரக்கூடிய ஒரு கட்சி. அண்ணா திமுக எம்ஜிஆர் இருக்கும்போது… ஜெயலலிதா இருக்கும்போது… அவுங்களும் அப்படி செஞ்சிருக்காங்க. அது மாதிரி ஒவ்வொரு காலகட்டத்தில் நடந்திருக்கு.
இந்தியா முழுவதும் இன்றைக்கு பல மாநிலங்களில் பெண்ணுரிமை இல்லாமல் இருக்கு. உதாரணமாக மணிப்பூர்ல நிறைய பெண்கள் கற்பழிக்கபட்டாங்க, பல பேர் கொல்லப்பட்டிருக்காங்க. இது மாதிரி இன்னும் பெண்ணடிமை, பெண்களுக்கு நடக்கின்ற கொடுமை, கற்பழிப்பு, வன்முறை சம்பவங்கள், வன்கொடுமை இந்த மாதிரி மகளிருக்கான கொடுமைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கு. அதை நீக்க.. அவற்றை எல்லாம் கலைய வேண்டும் என்பதற்காக…. மகளிர் உரிமை தினமாக…. மகளிர் உரிமைகளை மீட்பதற்காக…. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாநாடு போட்டது.
அதற்கு சோனியா காந்தி அம்மையார். இந்தியாவிலேயே சோனியா காந்தி அம்மையார் ஒரு புரட்சி பெண்மணி. தன்னுடைய மாமியார் ரத்த வெள்ளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு மிதந்த போதும்… தன்னுடைய கணவர் ரத்த வெள்ளத்தில் பல சுக்கு நூறாக உடல் சிதைந்து கொல்லப்பட்ட போதும்…. தன்னுடைய கொழுந்தனார் விபத்தில் இறந்தபோது….
இந்த மாதிரி ஒரு பெண்மணி வீட்டுல யாராவது நடந்திருந்தால் ? சாதாரண பெண்மணியாக இருந்தால் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க. ஆனால் காங்கிரஸ் கட்சி நலன் காப்பதற்காக.. ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் தலைமை பொறுப்பேச்சு, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பாடுபட்ட ஒரு வீராங்கனை அன்னை சோனியா காந்தி அம்மையார் என தெரிவித்தார்.