செய்தியாளர்களிடம் பேசிய  துரை வைகோ, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி காவிரியின் தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. காவிரியின் நீர் மேலாண்மை வாரியம் சொல்வதையும்,  கர்நாடகம் பொருட்படுத்துவதில்லை. இதனால் தஞ்சை மண்டலத்தில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிவிட்டன.  இந்த பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கடுகளவு கூட அதற்குரிய முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை.

இந்த மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,  அதே வேளையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதியை வழங்காமல், ஏழை – எளிய – மக்கள் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசின் போக்கை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 16 கோடி ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த 16 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்றால் ?

ஒரு ஆண்டிற்கு 2  லட்சத்தி 70 ஆயிரம் கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். அவ்வாறு அந்த நிதியை ஒதுக்காமல்,  ஆண்டுக்காண்டு அந்த நிதியை குறைத்து வருகிறது ஒன்றிய அரசு. அந்த நிதி குறைப்பால் ஏழை – எளிய மக்கள் குறிப்பாக…  கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைப் பெண்கள், பட்டியலின மக்கள்,  பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆதலால் அதை தவிர்க்கும் விதமாக 100 நாள் வேலைத்திட்டத்திற்கு போதிய நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் இந்த இரண்டு விஷயத்தில் ..தமிழ்நாட்டை பாதிக்கும் காவிரி விஷயம் மட்டுமல்ல. இந்த நாட்டையே…  இந்த நாட்டினுடைய ஏழை மக்கள் பாதிக்கப்படும் 100 நாள் வேலை திட்டத்திற்காகவும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.