செய்தியாளரிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், காவேரி விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு ஒன்று தான்.  தமிழகத்திற்கு சாகுபடி செய்வதற்கு நிச்சயமாக நீர்வரத்து இல்லாமல் ஒன்னும் பண்ண முடியாது. விவசாயிகள் கஷ்டப்படுறாங்க. குடிநீருக்கே பிரச்சனை இருக்கக்கூடிய சூழ்நிலை தான் இருக்கு. சுப்ரீம் கோர்ட் ஆர்டர்  இருந்தாலும் கர்நாடக மாநிலம் தண்ணி கொடுக்காமல்…  அவங்க நீர்வரத்து அதிகமாக இருக்கிறது என நினைச்சா தண்ணீரை திறந்து விட்டுறுதாங்க. இப்போ நமக்கு தேவை கர்நாடக அரசு நீர் கொடுக்கல.

6 லட்சம் ஏக்கர் பயிருக்கு தண்ணீர் இல்லாத ஒரு பிரச்சனை தொன்று தொட்டு நடந்துகிட்டு இருக்கு. அங்கு இங்க இருக்கக்கூடிய ஆட்சிக்கு சாதகமான அரசு இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை.   காவேரி ஆணைய குழு எல்லாம் இருந்தாலும்  கூட… ஏன் இதை ஒரு நாட்டுக்குள்ள நம்மளால சரி பண்ண முடியல என்கிற கேள்வி தான் கேட்பேனே ஒழிய,  தொடர்ந்து நம்ம சகோதரர்கள் எல்லாரும் சொன்னாங்க நாம இதுக்கு போராட்டம் நடத்துவோம்ன்னு. போராட்டம் தொன்று தொட்டு நடந்துள்ளது.

இதுக்கு ஒரு விடிவு காலம் எப்போ வரும்னா…. சென்ட்ரல் கவர்ன்மென்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா….  நாம் இருப்பது ஒரே நாடு. இந்த நாட்டில் இருக்கிற ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று  தராமல் இருப்பது வருந்தத்தக்க ஒன்று என அழுத்தமா சொன்னாதான், இதற்க்கு தீர்வு காண முடியுமே ஒழிய,  அங்க இருக்கக்கூடிய விவசாயிகள் மாண்டியா, மைசூர் பக்கத்துல இருக்குற விவசாயிகள் அவங்களுக்கு தண்ணீர் கொடுக்க கூடாதுன்னு ஒரு எண்ணம் இருக்கு.

சரியான ஒரு புரிதல் இல்லாம இருந்திட்டு இருக்காங்க. அவங்களும் நம்ம கூட சேர்ந்து வாழ்கின்றார்கள், அவுங்களும் இந்தியர்கள் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வரணும்.  ஒரே நாடு,  ஒரே தேர்தல் என சொல்லுற நேரத்துல ஒரே நாட்டுக்குள்ள இந்த பிரச்சனை வருவது வேடிக்கையாக இருக்கு.மத்திய அரசு வலுவாக இல்லை என்று சொல்ல முடியாது. வலுவாய் இருக்கணும்னு நான் சொல்றேன் என தெரிவித்தார்.