தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வார விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பிற இடங்களுக்கு கூடுதலான பயணிகள் பயணம் செய்வார்கள். இதனால் அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு அக்டோபர் 6 இன்று செல்ல கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களுக்கும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.