கேரளாவில் கே எஸ் ஆர் டி சி ஊழியர்களுக்கு சீருடை அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சீருடை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி நீல நிற சட்டை மற்றும் பேண்ட் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த சீருடை மாற்றப்பட்டுள்ளது. அதாவது நீல நிறத்திற்கு பதில் காக்கி நிறம் வர உள்ளது. மேலும் இந்த புதிய சீருடைகளை இலவசமாக வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அதே சமயம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சீருடை விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய சீருடைக்கு தேவையான துணி தேசிய ஜவுளிக்கழகத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும். மேலும் இதற்காக அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது . இருந்தாலும் ஸ்விப்ட் பஸ் ஊழியர்களின் சீருடை மாற்றம் இருக்காது எனவும் மெக்கானிக்கல் துறை ஊழியர்களுக்கு தற்போது உள்ள நீல நிற சீருடை மாற்றம் இல்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.